Thursday, May 7, 2026

பாடல் - 59 : எது செய்தாலும் குற்றம் சொல்லுது ஊரு

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
மனிதன் என்று 
அதற்குத்தானே பேரு 
மனதைத் தொட்டு 
உண்மை சொல்ல கேளு 
மனித வடிவில் 
நஞ்சு கொண்ட விலங்கு 
சொல்லில் செயலில் 
பிறரை தாக்கும் குரங்கு

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

நமது செயல்களை 
குறை சொன்னால் வரும் கோபம் 
பிறர் மேல் சொல்ல 
அவர்க்கும் உண்டு வீரம் 
நமது வேலை 
நமது செயலென இருப்பாய் 
எல்லை தாண்டி 
ஏசல் பேசல் தவிர்ப்பாய் 
நாக்கு வளையும் 
என்பதற்காக வெளியே! 
விட்டால் துண்டாய் 
விழுந்து போகும் தனியே!

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

உரிமை என்பது 
எல்லைக்குள்ளே இருக்கு 
மீறி விட்டால் 
உனக்கும் சட்டம் பொறுப்பு 
வாய்க்கு வந்ததை 
பேசிட வேண்டாம் தம்பி 
வரம்பு மீறினால் 
தண்டனை உண்டு தம்பி 
பிறரை குறைகள் 
சொல்ல உரிமை இல்லை 
திறமை காட்டு 
வானம் உனது எல்லை

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 
மனிதன் என்று 
அதற்குத்தானே பேரு 
மனதைத் தொட்டு 
உண்மை சொல்ல கேளு 
மனித வடிவில் 
நஞ்சு கொண்ட விலங்கு 
சொல்லில் செயலில் 
பிறரை தாக்கும் குரங்கு

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு 

நமது செயல்களை 
குறை சொன்னால் வரும் கோபம் 
பிறர் மேல் சொல்ல 
அவர்க்கும் உண்டு வீரம் 
நமது வேலை 
நமது செயலென இருப்பாய் 
எல்லை தாண்டி 
ஏசல் பேசல் தவிர்ப்பாய் 
நாக்கு வளையும் 
என்பதற்காக வெளியே! 
விட்டால் துண்டாய் 
விழுந்து போகும் தனியே!

எது செய்தாலும்
குற்றம் சொல்லுது ஊரு 
தனது குற்றம் 
மறந்து வாழுது பாரு