Friday, November 13, 2026

பாடல் - 67 : பாட்டாளி மக்களுங்க

பாட்டாளி மக்களுங்க
பாடுபடும் கூட்டமுங்க.
ஏடெடுத்து படிச்சதில்ல
ஏமாத்த நினைச்சதில்ல

காடுமேடு நிலம்திருத்தி
கழனிகளைச் சமைத்தெடுத்து
ஏருபூட்டி உழுதிடுவோம்
சோறுஉண்ண செய்திடுவோம்

பாட்டாளி மக்களுங்க
பாடுபடும் கூட்டமுங்க.
ஏடெடுத்து படிச்சதில்ல
ஏமாத்த நினைச்சதில்ல

ஏத்தம் போட்டு நீர் எறச்சி
நெல்லு பசி போக்கிடுவோம்
ஊத்து மணல் நாத்தெடுத்து
பயிரு பச்சை செஞ்சிடுவோம்
சேர்த்து வச்ச ஆசையெல்லாம்
பயிருக்கு உரமிடுவோம்
கண்ண போல காத்திருந்து
களத்து மேடு சேர்த்திடுவோம்

பாட்டாளி மக்களுங்க
பாடுபடும் கூட்டமுங்க.
ஏடெடுத்து படிச்சதில்ல
ஏமாத்த நினைச்சதில்ல

வறுமையில நடவுசெய்து
மலைபோல நம்பிடுவோம்
பயிரெல்லாம் அறுத்தெடுத்து
நல்லவிலை கேட்டுநிற்போம்
கேட்டவிலை கிடைப்பதில்லை
தந்தவிலை வாங்கிடுவோம.
இப்படியே எங்களோடா
பிழைப்புகளை நடத்திடுவோம்

பாட்டாளி மக்களுங்க
பாடுபடும் கூட்டமுங்க.
ஏடெடுத்து படிச்சதில்ல
ஏமாத்த நினைச்சதில்ல