Wednesday, November 18, 2026

பாடல் - 72 : ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே
ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே
மக்கள் ஆட்சி என்ற போதும்
மக்களுக் கான ஆட்சியில்லை
பதவியில் இருக்கும் உங்களுக் காக
தனியே சட்டம் இயற்றுகின்றீர்
மக்கள் ஆட்சி என்ற போதும்
மக்களுக் கான ஆட்சியில்லை
பதவியில் இருக்கும் உங்களுக் காக
தனியே சட்டம் இயற்றுகின்றீர்


ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே


சட்ட மன்ற உறுப்பினர் கூட
அரசு ஊழியர் சரிதானே
மத்திய மந்திரி என்பவர் கூட
மத்திய அரசு ஊழியரே
சட்ட மன்ற உறுப்பினர் கூட
அரசு ஊழியர் சரிதானே
மத்திய மந்திரி என்பவர் கூட
மத்திய அரசு ஊழியரே
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் உள்ளோர்
ஓய்வு ஊதியம் பெறுகின்றார்
முப்பது ஆண்டுகள் உழைத்தும் கூட
ஓய்வு ஊதியம் அவர்க்கில்லை
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் உள்ளோர்
ஓய்வு ஊதியம் பெறுகின்றார்
முப்பது ஆண்டுகள் உழைத்தும் கூட
ஓய்வு ஊதியம் அவர்க்கில்லை


ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே


ஓட்டு போட்டு வந்தவர் வேறு
அரசு ஊழியர் வேறென்றீர்
சட்டம் இயற்றி சலுகைகள் பறித்து
ஆட்சி நடத்தி வருகின்றீர்
ஓட்டு போட்டு வந்தவர் வேறு
அரசு ஊழியர் வேறென்றீர்
சட்டம் இயற்றி சலுகைகள் பறித்து
ஆட்சி நடத்தி வருகின்றீர்
வாழும் மக்கள் யாவரும் ஒன்றே
என்ற எண்ணம் கொண்டிடுவீர்
ஊழியர் எல்லாம் ஒன்றாய் மதித்து
சட்டம் வேறு செய்திடுவீர்
வாழும் மக்கள் யாவரும் ஒன்றே
என்ற எண்ணம் கொண்டிடுவீர்
ஊழியர் எல்லாம் ஒன்றாய் மதித்து
சட்டம் வேறு செய்திடுவீர்


ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே
ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் அரசியல் கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே
மக்கள் ஆட்சி என்ற போதும்
மக்களுக் கான ஆட்சியில்லை
பதவியில் இருக்கும் உங்களுக் காக
தனியே சட்டம் இயற்றுகின்றீர்
மக்கள் ஆட்சி என்ற போதும்
மக்களுக் கான ஆட்சியில்லை
பதவியில் இருக்கும் உங்களுக் காக
தனியே சட்டம் இயற்றுகின்றீர்


ஒரே நாடு ஒரே தேர்தல்
புலம்பும் மனித கூட்டங்களே
ஒரே ஆதார் ஒரே ரேஷன்
வைத்து இணைக்கும் அரசுகளே